மாயக்கதையான அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்
ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கடந்த ஏப்ரல் 23 தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இறந்த எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் வேறு சில ஆசிரியர்களின் பிறப்பு மற்றும் இறப்பு நிறைவைக் குறிக்கும் தேதி என்றும் முடிவு செய்தது. வாசிப்பு மற்றும் வெளியீட்டின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதைத் முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்குவோம். தமிழில் சிறுவர் கதைகள் பற்றி நாம் அறிந்து இருந்தாலும். சிறுவர்களோடு இணைந்து சிந்திக்கும் மனப்பக்குவம் கொண்ட சில கதைகளில் ஒன்று “ அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் இந்த கற்பனை நூல் சிறுவர்களைத் தனதாக்கிக் கொள்ளும் சிறப்புக்குரியதாகும். மலையாள எழுத்துலகில் சிறுவர்களுக்காக எழுதிக் குவித்த மாலி இந்த நூலை மலையாளத்தில் எழுத, மூலத்தின் ரசனை குறையாமல் அழகு தமிழில் பிரபல எழுத்தாளர் உதயசங்கர்தமிழாக்கம்செய்திருக்கிறார். அய்யாச்சாமி தாத்தாவின் பலாமரம்’, ‘ஆட்டுக்கல் மீசை’, ‘சங்கரநாராயணனும் கிங்கர யானையும்’, ‘பல்லின் வ...