மாயக்கதையான அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்
ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கடந்த ஏப்ரல் 23 தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இறந்த எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் வேறு சில ஆசிரியர்களின் பிறப்பு மற்றும் இறப்பு நிறைவைக் குறிக்கும் தேதி என்றும் முடிவு செய்தது. வாசிப்பு மற்றும் வெளியீட்டின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதைத் முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் உருவாக்குவோம். தமிழில் சிறுவர் கதைகள் பற்றி நாம் அறிந்து இருந்தாலும். சிறுவர்களோடு இணைந்து சிந்திக்கும் மனப்பக்குவம் கொண்ட சில கதைகளில் ஒன்று “ அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும் இந்த கற்பனை நூல் சிறுவர்களைத் தனதாக்கிக் கொள்ளும் சிறப்புக்குரியதாகும்.
மலையாள எழுத்துலகில் சிறுவர்களுக்காக எழுதிக் குவித்த மாலி இந்த நூலை மலையாளத்தில் எழுத, மூலத்தின் ரசனை குறையாமல் அழகு தமிழில் பிரபல எழுத்தாளர் உதயசங்கர்தமிழாக்கம்செய்திருக்கிறார்.
அய்யாச்சாமி தாத்தாவின் பலாமரம்’, ‘ஆட்டுக்கல் மீசை’, ‘சங்கரநாராயணனும் கிங்கர யானையும்’, ‘பல்லின் வேலை நிறுத்தம்’, ‘தாமரைப் பூவும் வண்டும்’, ‘சொர்க்கமும் நகரமும்’, ‘கொண்டையில்லாத சேவல்’, என மொத்தம் 18 கதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் அமைந்திருப்பதும், குழந்தைகள் படித்துப் படித்துச் சிரித்து மகிழும் வகையிலிருப்பதும் இந்த நூலின் தனித்துவமாகும்.
இந்த நூலின் முதல் கதையான ‘அய்யச்சாமி தாத்தாவின் பலாமரம்’ என்ற கதையில் அய்யாச்சாமி தாத்தாவின் தலைமுடியும் தாடியும் வைக்கோல் நிறத்தில் அடர்த்தியாக வளர்ந்திருக்கிறது. அவருக்கு பலாப்பழம் என்றால் கொள்ளை ஆசை. ஒருமுறை அய்யாச்சாமி தாத்தா கொட்டையுடன் பலாச் சுளையைச் சாப்பிட்டு விடுகிறார். அவருடைய வயிற்றில் அந்தக் கொட்டை செடியாக வளர்ந்து அவருடைய காது வழியாக கிளை பரப்பி மரமாக வளர்ந்து விடுகிறது. இதற்கு மேலும் இந்தக் கதையைப் படிக்கும் போது சிரிக்காமல் இருக்க முடியாது.
இந்த தொகுப்பில் உள்ள கதைகளில் பெரும்பாலானவை ஃபேண்டசிக்கதைகள் தான். அதனால்
தான் அய்யாச்சாமி தாத்தாவின் காதுவழியே முளைத்த பெரிய பலாமரத்தில் அய்யாச்சாமி
தாத்தாவே ஊஞ்சல் கட்டி ஆடுகிறார். தன்னுடைய வால் ரோமத்தைப் பிடுங்கிய சங்கரநாராயணனைத் துரத்தும் கிங்கர யானை அவன் குளத்தில் இறங்கினால் இறங்குகிறது. மரத்தில் ஏறினால் ஏறுகிறது. ஊதுகுழலுக்குள் நுழைந்தால் அதுவும் நுழைகிறது. இப்படியான கதைகளே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். வாசிப்பதற்குச் சுவாரசியமான மனித இயல்புகளை சுட்டாமல் சுட்டிச்செல்லும் கதைகள்.
தான் அய்யாச்சாமி தாத்தாவின் காதுவழியே முளைத்த பெரிய பலாமரத்தில் அய்யாச்சாமி
தாத்தாவே ஊஞ்சல் கட்டி ஆடுகிறார். தன்னுடைய வால் ரோமத்தைப் பிடுங்கிய சங்கரநாராயணனைத் துரத்தும் கிங்கர யானை அவன் குளத்தில் இறங்கினால் இறங்குகிறது. மரத்தில் ஏறினால் ஏறுகிறது. ஊதுகுழலுக்குள் நுழைந்தால் அதுவும் நுழைகிறது. இப்படியான கதைகளே இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள். வாசிப்பதற்குச் சுவாரசியமான மனித இயல்புகளை சுட்டாமல் சுட்டிச்செல்லும் கதைகள்.
திரு.உதயசங்கர் அவர்கள் பிறமொழில் இருந்து தமிழ் மொழில் எழுதிய அழகிய நூல் “ இயற்கையின் அற்புத உலகில் ” இது ஒரு குட்டிப்பாப்பாவின் கதை.
குட்டிப்பாப்பா தன்னுடைய வீட்டைச் சுற்றியுள்ள இயற்கையின் அற்புதங்களைப் பார்த்து வியந்து போகிறாள். முல்லைக்கொடி, ஒவ்வொன்றையும் அதிசயமாகவும், ஆச்சரியத்தோடும் பார்க்கிறாள். அந்த அதிசயத்தை ஆராய்ந்து பார்க்கிறாள். அதற்கான காரணத்தைப் பொறுமையாகக் கண்டு பிடிக்கிறாள். தான் கண்டுபிடித்த விசயங்களைப் பற்றி யோசிக்கிறாள். அப்படிக் கண்டுபிடித்த தன்னை பாராட்டிக் கொள்கிறாள். தன்னை ஒரு துப்பறியும் நிபுணராக, கண்டுபிடிப்பாளாராக, நினைக்கிறாள். எதிர்காலத்தில் இயற்கை அறிவியலாளராக உருவாகவேண்டும் என்ற ஆவல் அவளுக்கு உருவாகிறது.
நீங்கள் வாசிக்கும்போது குட்டிப்பாப்பாவோடு கூட இருப்பீர்கள். குட்டிப்பாப்பா உங்களை உடன் அழைத்துச் செல்வாள். உங்களுக்கு இயற்கையின் அற்புதங்களைக் காட்டுவாள். வாசித்து முடிக்கும் போது பெரியவர்களானாலும் சரி குழந்தைகளானாலும் சரி சுற்றும் முற்றும் பார்ப்பீர்கள். எறும்புகளுக்கும், புழுக்களுக்கும் காக்கைகளுக்கும் குயில்களுக்கும் செடி கொடிகளுக்கும் கூட வணக்கம் சொல்வீர்கள். இயற்கையின் மீது அன்பு பொங்கும். அனைத்து உயிர்களைகளையும் நேசிக்கத் தொடங்கிவிடுவோம். நாம் வாழும் இந்தப்பூமி நமக்கானது மட்டுமில்லை என்ற எண்ணம் உறுதிப்படும். அனைத்து உயிர்களின் மீதும் அன்பு வரும்.
குழந்தைகள் மனதில் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். தன்னைப்போல அனைத்து உயிர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய படைப்புகளின் பாதையில் பேசும் தாடி நாவலும் செல்கிறது. மாயாஜால யதார்த்தத்தின் வழி குழந்தைகளின் மனதைக் கவர முயற்சிக்கிறது இயற்கை உண்மைகளையும் மாயாஜாலத்தையும் இணைத்து குழந்தைகளிடம் முன் வைக்கிறது.
ஆசிரியர் பின்குறிப்பு
திரு.உதயசங்கர் அவர்கள் கோவில்பட்டி ஊரில் பிறந்தார்.அவர் 1980 இருந்து சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு,கட்டுரை ,சிறுவர் இலக்கியம் ஆகியவற்றை இயக்கியுள்ளார். தமுஎக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆவர். இதுவரை
ஒன்பது சிறுகதைத் ,ஒரு குறுநாவல் , ஐந்து கவிதைத் , எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலத் துணைப்பொதுச்செயலாளர்.
திரு.உதயசங்கர் அவர்கள் பல விருதுகளை பெற்றுவுள்ளார். அவருக்கு விகடன் விருது 2016 யில் மாயக்கண்ணாடி” என்ற நீதிகதை கொண்ட புத்தகத்திற்கு வழங்கப்பட்டது.
நல்ல நூல்களை படிப்போம் !!
நல்ல சிந்தனைகளை வளர்ப்போம்!!
Comments
Post a Comment